search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தப்பி ஓட்டம்"

    • விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தில் தென்பெ ண்ணை ஆற்றிலிருந்துஅடிக்கடி திருட்டு தனமாக மணல் அள்ளி கடத்தி வருவதாக புகார் வந்தது
    • அப்போது அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தினார்கள். அப்போது அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் தப்பி ஓடி விட்டார்.  விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தில் தென்பெ ண்ணை ஆறு உள்ளது. இந்த ஆற்றங்கரையில் இருந்து அடிக்கடி திருட்டு தனமாக மணல் அள்ளி கடத்தி வருவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பார்த்தீபன் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரகதபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அபபோது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினார்கள். அப்போது அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்த போது அதில் மணல் ஏற்றப்பட்டு இருந்தது. இந்த மணல் மரகதபுரத்தில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.   லாரியை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். லாரி உரிமையாளர் யார். அவருக்கும் மணல் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் வாலிபர் புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • புதுப்பெண் வீட்டுக்கு சென்ற வாலிபர் தகராறில் ஈடுபட்டார். மேலும் பெண்ணை தாக்கவும் முயன்றார்.

    குழித்துறை:

    அருமனை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    சென்னை என்ஜினீயருக்கும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது. இளம்பெண் பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அங்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இதனால் பெண்ணின் திருமணமத்திற்கு சேலம் வாலிபரும், பெங்களூருவில் அவருடன் பணிபுரிந்தவர்களும் வந்தனர். மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

    இந்நிலையில் சேலம் வாலிபர், புதுப்பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புதுப்பெண்ணிடம் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஏன்? என்று புதுப்பெண் கேட்டபோது, அவர் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை எனவும், பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை என்றால் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன புதுப்பெண், சேலம் நண்பரின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார். மேலும் இதுபற்றி கணவரிடமும் கூறினார்.

    இதற்கிடையே சேலம் நண்பரின் போனை புதுப்பெண் எடுக்காததால் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் மார்த்தாண்டம் வந்தார். இங்கு புதுப்பெண் வீட்டுக்கு சென்ற அவர், தகராறில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண்ணை தாக்கவும் முயன்றார்.

    இதனால் பயந்து போன பெண் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சேலம் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பேரை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கோவை,

    கோவை கணபதி லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி அம்பிகா (வயது 42).

    இவர் கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் லட்சுமி புரம் பகுதியில் உள்ள

    காப்பகத்தில் காவலாளி யாக வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று காப்பகத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தேன்.

    அப்போது காப்பகத்தில் இருந்த மதுரையை சேர்ந்த 19 வயது பெண், காரமடையை சேர்ந்த 22 வயது பெண், தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தையுடன் இருந்து வரும் திருப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் சேர்ந்து நான் தூங்கி கொண்டு இருந்த போது எனது தலையணையின் அடியில் இருந்த காப்பகத்தின் சாவியை எடுத்து மாயமாகி விட்டனர்.

    அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவர்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 பெண்களையும் குழந்தையும் தேடி வந்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் உள்பட 2 பெண்கள் அவர்களது வீட்டு சென்று விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மற்ற 2 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 இளம் பெண்களும் எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினையா என 2 பேரை மீட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
    • இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார் இன்று காலை ராமநாதன்குப்பம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்தபோது லாரியில் இருந்த 2 பேர் திடீரென்று அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் லாரியில் சென்று பார்த்த போது 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது பெரிய வந்தது. மேலும் இந்த லாரியில் பதிவு எண் இல்லை . இது மட்டுமின்றி லாரியில் என்ஜினில் எண்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட இரும்பு பொருட்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? லாரியில் பதிவு எண் மற்றும் முக்கிய எண்களை அழிக்கப்பட்டதால் திருட்டு லாரி? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர்.
    • பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர்.

    கடலூர்:

    விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.

    அதுபோல கடந்த 31-ந் தேதி இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிடுகின்றனர்.இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க பண்ருட்டிக் கு அழைத்து வந்தனர். அப்போது பிரவின்குமார் என்ற வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து பண்ருட்டி உதவி போலீஸ் சுப்பிரண்டு சபியுல்லா, முத்தாண்டி க்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஒடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • இதனை அடுத்து ஆசனூர் போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரங்கராமை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தலமலை கொடி புறம் பிரிவு அருகே ஒருவர் சந்தேகம் படும்படி மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தார்.

    திடீரென அந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் கர்நாடகா மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராம் (37) என்பவர் கர்நாடகவில் இருந்து மதுவை வாங்கி வந்து அனுமதி இன்றி விற்றது தெரிய வந்தது.

    இதனை அடுத்து ஆசனூர் போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரங்கராமை தேடி வருகின்றனர்.

    • சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் குமார் (வயது 23), இவரது தம்பி ரட்சக நாதன் (19), எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (19) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய எறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் பெர்ணான்டஸ், காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டீக்கடை நடத்தி வருபவர் ராணி
    • சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மொளசூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டீக்கடை நடத்தி வருபவர் ராணி (வயது 60), இவர் டீக்கடைக்கு மர்ம நபர் ஒருவர் வந்து டீ வாங்குவது போல வந்துள்ளார். பின்னர் திடீரென அந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இந்த சி.சி.டி. காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி. காட்சிகளைக் கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • தலைமறைவான சிறுவனை 45 நிமிடங்களில் பிடித்த போலீசார் பின்னர் மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • மருத்துவ பரிசோதனை முடிந்த பின் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஈரோடு:

    சித்தோடு கன்னிமார் கோவில் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு வழக்கில் வெள்ளோடு போலீசார்கையும், களவுமாக பிடித்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு வெள்ளோடு போலீசார் சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சிறுவன் கூறியுள்ளார்.

    இதை நம்பி போலீசார் கழிவறைக்கு செல்ல அனுமதி த்தனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறை சென்று பார்த்த போது பின் வழியே தப்பி ஓடியது தெரியவ ந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். தப்பிய சிறுவன் படம், அங்க அடையா ளங்கள், ஆடை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்க ப்பட்டன.

    ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் ஜி. ஹெச். ரவுண்டானா முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்துறையில் இருந்து வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் அச்சிறுவன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தலைமறைவான சிறுவனை 45 நிமிடங்களில் பிடித்த போலீசார் பின்னர் மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மருத்துவ பரிசோதனை முடிந்த பின் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் பாலியல் கைதி தப்பி ஓடினார். அவரை ராமநாதபுரம் போலீசார் 2 தனி படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
    • பத்மேசுவரனின் உறவினர், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்” என்றார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மேசுவரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு உள்ளது. அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பத்மேசுவரன், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

    தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக, தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    பத்மேசுவரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோரிப்பாளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேசுவரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியது தெரியவந்தது.

    மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம் பகுதிகளில் பத்மேசுவரனுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீடுகளில் பத்மேசுவரன் பதுங்கி உள்ளாரா? என்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பத்மேசுவரன் ஜெயிலில் இருந்து தப்பியது தொடர்பாக ராமநாதபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், "மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியபத்மேசுவரனை பிடிக்கும் பணியில் மதுரை மாநகர போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித், குற்றப்புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பத்மேசுவரனின் உறவினர், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்" என்றார்.

    • முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சாமி கும்பிட வந்த போது உள்ளூர் நபர்களுடன் தகராறு ஏற்பட்டது.
    • இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய ராஜ துரை என்பவர் கடந்த வாரம் பாத்ரூமில்வழுக்கி விழுந்ததில் வலதுகை உடைபட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் வீரனார் கோவில் அருகில் கடந்த 15-ம் தேதி முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சாமி கும்பிட வந்த போது உள்ளூர் நபர்களுடன் தகராறு ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி முத்துப்பேட்டை செம்படவன் காடு மங்களூர் பகுதியை சேர்ந்த கார்த்தி இறந்தார். இது குறித்து அவரது மனைவி சுகன்யா (வயது 29) கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய ராஜ துரை என்பவர் கடந்த வாரம் பாத்ரூமில்வழுக்கி விழுந்ததில் வலதுகை உடைபட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற குற்றவா ளிகளான சத்யராஜ், செல்வா ஆகிய இருவரும் மறைந்திருக்கும் இடத்தை அறிந்து போலீசார் அவர்களை விட்டி சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய அவர்கள் தடுமாறி விழுந்து இருவருக்கும் இடதுகை உடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

    ×